Senthooram Jagdish blog

         jagdishk.dinstudio.com

Also vist my blog on tamil literature

senthooramjag.blogspot.in

my blog on foods -  mytasteforu.blogspot.in

To contact me  _
jagdishshahri@gmail.com

TAMIL MOVIES-PATRIOTIC SONGS 

சினிமாவில் சுதந்திர உணர்வு

8/14/2013

 

 

திரைப்படங்களில் ஏராளமான ஜெய்ஹிந்த் கோஷங்களைப் பார்த்து விட்டோம். பாரதியின் பாடல்கள் முதல் காந்தி தேசமே காவல் இல்லையா என்ற வைரமுத்துவின் வைர வரிகள் வரை எத்தனையோ பாடல்களைக் கேட்டுவிட்டோம்.

திரையுலகின் சுதந்திர தின நினைவுகளில் சில இனிமையான நினைவுகள் என்னுள் உண்டு.

சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமது சிம்மக்குரலால் சிம்மாசனமிட்டு மனங்களில் ஆட்சி செய்து வருகிறார். ராஜபார்ட் ரங்கதுரையில் அவர் தாயகமே என்னருமை தாயகமே என்ற பாடலுடன் திருப்பூர் குமரனாக கண்முன்னே இருக்கிறார். இந்திய நாடு என் வீடு என்று பாரத விலாசிலும் சொல்லாதே யாரும் கேட்டால் என்று சொர்க்கத்திலும் பாடித்திரிகிறார். பலகோடி உள்ளங்கள் வாழ்கின்ற நாடு, பதினாறு மொழிபேசும் அழகான வீடு என்று அம்மம்மா தம்பி என்று நம்பி பாட்டில் உருக வைக்கிறார். தர்மம் எங்கே, சிவந்த மண் படங்களில் சுதந்திரப் போராட்ட வீரராக சிவாஜியின் நடிப்பு பொன்னையும் புறந்தள்ளுகிறது.

சிவந்தமண் படத்தில் முத்துராமனையும் நாம் மறக்கவில்லை. இந்தியில் தர்த்தி என்ற பெயரில் இயக்குனர் ஸ்ரீதர் இதனை ரீமேக் செய்த போது சிவாஜி வேடத்தில் திலீப்குமாரும் முத்துராமன் வேடத்தில் சிவாஜியும் நடித்தனர்.

சிவாஜி பாரதியாகவும் பகத்சிங்காகவும் நடித்திருக்கிறார்.

 

 

 

அவன் ஒரு சரித்திரத்தில் நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடித்து நாளை என்ன நாளை இன்றுகூட நமதுதான் என்று மூவர்ணக் கொடி ஏந்தியிருக்கிறார்.

எம்ஜிஆரின் படங்களில் நாட்டுப்பற்று இல்லாத படமே இல்லை என்று கூறிவிடலாம். காந்தி,ஏசு, புத்தர், அண்ணா மீது பெரும் ஈடுபாடுடையவராக தமது படங்களில் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சித்தரித்துள்ளார் மக்கள் திலகம்.

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனில் தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை என்று புலவர் புலமைப்பித்தனின் வரிகளால் தேசப்பற்றை வெளிப்படுத்தியுள்ளார்.

நம்நாடு, நேற்று இன்றுநாளை, இதயக்கனி, போன்ற அரசியல் தூக்கலான படங்களில் எம்ஜிஆரின் அரசியல் எதிர்காலமும் எழுதப்பட்டு விட்டது. குறிப்பாக அவரது நான் ஆணையிட்டால் பாட்டும்தான்.

 

 

ரஜினி, கமல், விஜயகாந்த், அர்ஜூன்,  கே.பாலசந்தர், போன்ற திரைத்துறையினரும் தங்கள் படங்களில் சுதந்திர தேசத்தின் பிரச்சினைகளையும் பெருமைகளையும் பதிவு செய்துள்ளனர்.

கே.பாலசந்தரின் அச்சமில்லை அச்சமில்லை, உன்னால் முடியும் தம்பி, புன்னகை போன்ற படங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

விஜயகாந்த்தின் சிவப்புமல்லியில் பாட்டாளிக்கான குரல் ஒலித்தது. பாரதியாகவும் நடித்த பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் என்று டி.எம்.எஸ் குரலில் சாதிக்கொரு நீதியில் கேப்டன் பாடினார்.

ரஜினியின் நாட்டுக்கொரு நல்லவன் சிறந்த படம். ஆனால் ரசிகர்கள் அநியாயத்திற்கு நிராகரித்துவிட்டனர். வைரமுத்து-அம்சலேகா கூட்டணியில் இப்படத்தில் அமைந்த பாடல்களில் சுதந்திர உணர்வு பொங்கியெழுந்தது.

இப்படி தமிழ்சினிமாவின் சுதந்திர உணர்வை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். கண்சிவந்தால் மண்சிவக்கும், பராசக்தி, ஏழாவது மனிதன், பாரதி போன்ற தீவிரமான படங்களில் நாட்டைப் பற்றிய பல்வேறு பார்வைகள் முன்வைக்கப்பட்டன.

சுதந்திர தினத்தையும், நாட்டுப்பற்றையும் வெளிப்படுத்தும் பாடல்களின் பட்டியல் ஒன்றையும் திரட்ட முயற்சிக்கிறேன்.

இது இன்னும் அதிகரிக்கலாம்.

 

1. நான் ஆணையிட்டால்-டிஎம்.எஸ்-வாலி- விஸ்வநாதன் ராமமூர்த்தி- எங்க வீட்டுப் பிள்ளை

2 எரிமலை எப்படி பொறுக்கும்- டி.எம்.எஸ், டி.எல்.மகராஜன்-சங்கர் கணேஷ்-வைரமுத்து-சிவப்புமல்லி

3. தாயகத்தின் சுதந்திரமே -டிஎம்.எஸ்-புலமைப்பித்தன்-எம்.எஸ்.வி- மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

4. சுதந்திர பூமியில் பலவகைத் தோட்டத்து மலர்கள்- டி.எம்.எஸ்-கண்ணதாசன்-எம்.எஸ்.வி- தர்மம் எங்கே

5. தாயகமே என்னருமை தாயகமே- டி.எம்.எஸ்-கண்ணதாசன்-எம்.எஸ்.வி- ராஜபார்ட் ரங்கதுரை

6. அம்மம்மா தம்பி என்று நம்பி- டி.கே.கலா-கண்ணதாசன்-எம்.எஸ்வி-ராஜபார்ட் ரங்கதுரை

7. தங்கங்களே நாளை தலைவர்களே- டி.எம்.எஸ்-கண்ணதாசன்-எம்.எஸ்.வி- என்னைப் போல் ஒருவன்

8. இந்திய நாடு என்வீடு- டி.எம்.எஸ், பி.சுசிலா,எம்.எஸ்.வி, மலேசியாவாசுதேவன், எல்.ஆர்.ஈஸ்வரி, கோவை சௌந்தரராஜன்- பாடல் வாலி, இசை எம்.எஸ்வி- பாரதவிலாஸ்

9. நாளை என்ன நாளை- டி.எம்.எஸ்-கண்ணதாசன்-எம்.எஸ்.வி- அவன் ஒரு சரித்திரம்

10 வணக்கம் பலமுறை சொன்னேன்- டிஎம்.எஸ்-பிசுசிலா- கண்ணதாசன்-எம்.எஸ்வி-அவன் ஒரு சரித்திரம்

11. ஆயிரம் பொன்னை பூமியில் கண்டான்- பாடி இசையமைத்தவர் எம்.எஸ்.வி -பாடல்- கண்ணதாசன்

12. நாடு அதை நாடு- டி.எம்.எஸ், பி.சுசிலா-கண்ணதாசன்-எம்.எஸ்.வி- நாடோடி

13 வாங்கய்யா வாத்தியாரய்யா- டி.எம்.எஸ். பிசுசிலா-வாலி-எம்.எஸ்வி

14. நல்லநல்ல பிள்ளைகளை நம்பி- டி.எம்.எஸ்- வாலி-விஸ்வநாதன் ராமமூர்த்தி-பெற்றால்தான் பிள்ளையா

15. நல்லபேரை வாங்கவேண்டும்- டிஎம்.எஸ்-வாலி-எம்.எஸ்வி-நம்நாடு

16 சித்திரச் சோலைகளே- டி.எம்.எஸ்-பாரதிதாசன்- சங்கர் கணேஷ்- நான் ஏன் பிறந்தேன்

17.நான் ஏன் பிறந்தேன்- டி.எம்.எஸ்-கண்ணதாசன்- சங்கர் கணேஷ்-நான் ஏன் பிறந்தேன்

18. நீங்க நல்லா இருக்கோணும்- டிஎம்.எஸ், சீர்காழி கோவிந்தராஜன், எஸ்ஜானகி- புலமைப்பித்தன்-எம்.எஸ்வி

19 தம்பி நான் படிச்சேன் காஞ்சியிலே- டி.எம்.எஸ்- வாலி- எம்.எஸ்வி-நேற்று இன்று நாளை

20 அன்னமிட்ட கை இது - டி.எம்.எஸ்.-வாலி- எம்.எஸ்.வி- அன்னமிட்டகை

21 உழைக்கும் கைகளே- டி.எம்.எஸ்-கண்ணதாசன்-கே.வி.மகாதேவன்-

22 விவசாயி கடவுள் எனும்முதலாளி- டி.எம்.எஸ். கண்ணதாசன்-கே.வி.மகாதேவன்- விவசாயி

23. ஒருதாய் மக்கள் நாம் என்போம்- டி.எம்.எஸ். எல்.ஆர்.ஈஸ்வரி- கண்ணதாசன்- எம்.எஸ்.வி- ஆனந்த ஜோதி

24. அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்- டி.எம்.எஸ்-கண்ணதாசன்-விஸ்வநாதன் ராமமூர்த்தி- ஆயிரத்தில் ஒருவன்

25. நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா- டி.எம்.எஸ்-கண்ணதாசன் -எம்.எஸ்.வி- என்மகன்

26. சொல்லாதே யாரும் கேட்டால்-டி.எம்.எஸ்-கண்ணதாசன்-எம்.எஸ்வி- சொர்க்கம்

27. அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்- டி.எம்.எஸ்-வாலி-எம்.எஸ்.வி- ரிக்சாக்காரன்

28. காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்- டிஎம்.எஸ்-கண்ணதாசன்-சங்கர்கணேஷ்- இதயவீணை

29. புத்தன் ஏசு காந்தி - டி.எம்.எஸ்-வாலி-எம்.எஸ்.வி-சந்திரோதயம்

30.நான் உங்கள் வீட்டுப்பிள்ளை- டி.எம்.எஸ்- பூவை செங்குட்டவன்- எம்.எஸ்.வி- புதிய பூமி

31. கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்- டி.எம்.எஸ்- மருதகாசி-எம்.எஸ்.வி- நினைத்ததை முடிப்பவன்

32. புத்தன் வந்த திசையிலே போர்- டிஎம்எஸ்- கண்ணதாசன்-கேவிமகாதேவன்- இரத்தத்திலகம்

33.பனிபடர்ந்த மலையின் மேலே -டி.எம்.எஸ்-கண்ணதாசன்-கேவிமகாதேவன்- இரத்தத்திலகம்

34.சிந்து நதியின் மிசை நிலவினிலே- டி.எம்.எஸ்-பாரதி- விஸ்வநாதன் ராமமூர்த்தி- கைகொடுத்த தெய்வம்

35.நெஞ்சு பொறுக்குதில்லையே- சிதம்பரம் ஜெயராமன்- பாரதி- ஜி.ராமனாதன்-

36. ஓடி விளையாடு பாப்பா- சீர்காழி கோவிந்தராஜன்- பாரதி- ஜி.ராமனாதன்- கப்பலோட்டிய தமிழன்

37. சிரித்துவாழ வேண்டும்- டிஎம்.எஸ்- புலமைப்பித்தன்- எம்.எஸ்.வி- உலகம் சுற்றும் வாலிபன்

38. புதியவானம் புதிய பூமி- டி.எம்.எஸ்-வாலி-எம்.எஸ்.வி- அன்பே வா

39 நான் பிறந்த நாட்டில் இந்த நாள் இனியது- டி.எம்.எஸ்- கண்ணதாசன்- எம்.எஸ்வி- தங்கச்சுரங்கம்

40 வீரமென்னும் பாவை தன்னை கட்டிக் கொள்ளுங்கள்- டி.எம்.எஸ், எல்ஆர் ஈஸ்வரி-கண்ணதாசன்-எம்.எஸ்வி- தர்மம் எங்கே

41 தர்மம் எங்கே நியாயம் எங்கே- சீர்காழி கோவிந்தராஜன்-கண்ணதாசன்-எம்.எஸ்.வி- தர்மம் எங்கே

42 கொடுத்ததெல்லாம் கொடுத்தான்- டி.எம்.எஸ்- வாலி- விஸ்வநாதன் ராமமூர்த்தி- படகோட்டி

43. நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும் இந்த நாட்டிலே- டி.எம்.எஸ்- கண்ணதாசன்- டாக்டர் சிவா

44. கூவுங்கள் சேவல்களே- எஸ்.பி.பி- வைரமுத்து- இளையராஜா- தனிக்காட்டு ராஜா

45 வாருங்கள் ஒன்றாய் சேருங்கள்- எஸ்.பிபி-வாலி- இளையராஜா- ராணுவ வீரன்

46. ஒரே மூச்சு போனால் போச்சு-எஸ்.பிபி, சித்ரா- வைரமுத்து-அம்சலேகா- நாட்டுக்கொரு நல்லவன்

47.மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால்- ஜேசுதாஸ்- வைரமுத்து- இளையராஜா- கண்சிவந்தால் மண்சிவக்கும்

48. என்ன தேசமோ இது என்ன தேசமோ- ஜேசுதாஸ்-வைரமுத்து-இளையராஜா- உன் கண்ணில் நீர் வழிந்தால்

49. காந்தி தேசமே காவல் இல்லையா- எஸ்.பி.பி- வைரமுத்து-இளையராஜா- நான் சிவப்பு மனிதன்

50. உன்னால் முடியும் தம்பி- எஸ்.பிபி- வாலி- இளையராஜா- உன்னால் முடியும் தம்பி

51. தூங்காதே தம்பி தூங்காதே- டி.எம்.எஸ். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்- நாடோடி மன்னன்

52. தூங்காதே தம்பி- எஸ்.பிபி- வாலி- இளையராஜா-தூங்காதே தம்பி தூங்காதே

53. பாரதநாடு பழம்பெரும் நாடு-டிஎம்.எஸ்- பாரதி- சங்கர் கணேஷ்- சாதிக்கொரு நீதி

54. கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்தததடி- டி.எம்.எஸ், பிசுசிலா- கண்ணதாசன்-கேவிமகாதேவன்- அவன் பித்தனா

55. எடுடா மேளம் அடிடா தாளம்- எஸ்.பிபி- வாலி- சங்கர் கணேஷ்- எங்க சின்ன ராசா

56. சிரிப்பு வருது சிரிப்பு வருது- சந்திரபாபு- கண்ணதாசன்- விஸ்வநாதன் ராமமூர்த்தி- ஆண்டவன் கட்டளை

57. ஏமாற்றாதே ஏமாறாதே- டி.எம்.எஸ்- வாலி-கே.விமகாதேவன்- அடிமைப்பெண்

58.நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா- டி.எம்.எஸ்- கண்ணதாசன்- கேவிமகாதேவன்- என் அண்ணன்

இன்னும் வரும்......

Number of comments: 0

Name: E-mailaddress: Homepage:
Message: